Homeசெய்திகள்தமிழ்நாடுமேகதாது விவகாரத்தில் தமிழகத்தை விற்கும் தவெகவின் சந்தர்ப்பவாத அரசியல் - சீமான் ஆவேசம்!

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை விற்கும் தவெகவின் சந்தர்ப்பவாத அரசியல் – சீமான் ஆவேசம்!

-

- Advertisement -

காவிரி நதிநீர் உரிமையை அண்டை மாநிலத்திடம் தாரைவார்த்து தமிழர்களின் வாழ்வாதாரத்தையே சூறையாடும் தவெக மற்றும் தேசிய கட்சிகளின் பச்சைத் துரோகத்தை இனியும் வேடிக்கைப் பார்க்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இடி முழக்கமிட்டுள்ளார். சமீபத்திய பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் நிர்வாகச் சீர்கேடுகளையும், கையாலாத்தத்தனமான அரசியலையும் அவர் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளார்.

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை விற்கும் தவெகவின் சந்தர்ப்பவாத அரசியல் - சீமான் ஆவேசம்!

we-r-hiring

எண்கூடத் தெரியாதவர்களின் ஏளனமான ஆட்சி!
மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டிய சட்டமன்றமும், நிதிநிலை அறிக்கையும் இன்று நகைப்புக்குரிய இடமாக மாற்றப்பட்டுள்ளதாகச் சீமான் சாடினார். “உலகத்திற்குக் கணிதத்தைக் கற்றுக்கொடுத்த தமிழ் மண்ணில், எண்களைக் கூடச் சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்களை நிதி அமைச்சராக அமர்த்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது இந்த அரசு. இது தமிழினத்திற்கே இழைக்கப்படும் வரலாற்றுப் பெருங்கேவலம்” என்று அவர் கடுமையாகச் சாடினார்.

காவிரி உரிமையை அடகு வைக்கும் சந்தர்ப்பவாத அரசியல்!
தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நதிநீரை மேகதாதுவில் அணை கட்டி மறிக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் தேசியக் கட்சிகளைக் கண்டித்த சீமான்,

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை விற்கும் தவெகவின் சந்தர்ப்பவாத அரசியல் - சீமான் ஆவேசம்!

“தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தைரியம் இருந்தால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசி மேகதாது அணைத் திட்டத்தை நிறுத்தச் சொல்லட்டும்! அப்போது தெரியும் அவர் தமிழனுக்காகப் பேசுகிறாரா அல்லது கன்னட அடிமையாக இருக்கிறாரா என்று!”

ஆவேசமாகச் சவால் விட்டார். காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாவும் நாடகமாடித் தமிழர்களை ஏமாற்றுவதாகவும், இவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு தமிழர்களின் உரிமையை அடகு வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சுரண்டப்படும் தமிழ் மண்!
கேரளாவும் கர்நாடகாவும் நமது மலையை வெட்டிச் கற்களையும் மணலையும் அள்ளிக்கொண்டு போய்விட்டு, அதற்குப் பதிலாகக் கழிவுநீரையும் மருத்துவக் குப்பைகளையும் தமிழகத்தின் மீது கொட்டுவதைக் கண்டித்த சீமான், இதைத் தட்டிக்க கேட்கத் தவெக அரசுக்குத் திராணியில்லையா என்று கேள்வி எழுப்பினார்.

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை விற்கும் தவெகவின் சந்தர்ப்பவாத அரசியல் - சீமான் ஆவேசம்!

“அடிமை வாழ்வினும் உரிமைச் சாவு மேலானது; சண்டையிட்டுச் சாவது மானமானது!” என்று முழங்கிய சீமான், தமிழர் தலைவன் மேதகு பிரபாகரனின் வழியில் இன விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் போராடும் எங்களது குரலை எவராலும் முடக்க முடியாது என்றார். “இன்று கோட்டையில் அமர்ந்திருப்பவர்கள் நாளை கீழே இறங்குவார்கள், வீதியில் நிற்பவர்கள் நாளை கோட்டைக்குச் செல்வார்கள்; இதுவே காலத்தின் புரட்சி!” என்று எச்சரித்த அவர், தமிழினத்தின் விரோதிகளுக்கு எதிராக மக்கள் தங்களது வாக்குரிமை என்னும் ஆயுதத்தைக் கொண்டு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று அறைகூவி அழைப்பு விடுத்தார்.

MUST READ