மார்ச் மாதத்தின் வங்கிகள் விடுமுறை நாட்கள். மார்ச் மாத வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறைகள் உள்ளன.
உள்ளூர் பண்டிகைகள், தேசிய விடுமுறைகளை பொறுத்து விடுமுறைகள் மாறும். அனைத்து மாநிலங்களுக்கும் 12 நாட்கள் விடுமுறைகள் உள்ளன.
மார்ச் மாதம் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 7ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடபடுகிறது. மேலும் மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநிலங்களில் ஹோலிபண்டிகை கொண்டாபடுகிறது என்பதால் அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 11ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வழக்கம் போல் விடுமுறை. 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 19ம் தேதியும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22ம் தேதி உகாதி பண்டிகை கொண்டாபடுகிறது.

மேலும், மார்ச் 25ம் தேதி சனிக்கிழமை, 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 25ம் தேதி சனிக்கிழமை விடுமுறை நாளாகும். மார்ச் மாதம் 30ம் தேதி ராமநவமி கொண்டாடபடுகிறது.
ஆக மொத்தம் இந்த மார்ச் மாதத்தில் மட்டும் 12 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சில மாநிலங்களில் 9 நாட்கள் மட்டுமே விடுமுறைகள் உள்ளன.
