தமிழ்நாடு

அடிதடி, கொலை முயற்சி வழக்கில் பாஜக ஐடி விங் நிர்வாகி கைது

Published by
Aishwarya
Share

அடிதடி, கொலை முயற்சி வழக்கில் பாஜக ஐடி விங் நிர்வாகி கைது

ஆத்தூர் அடுத்த தலைவாசல் அருகே உள்ள வீரகனூரில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் பாஜகவின் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

Salem district BJP IT Wing secretary Samuel arrested
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் இவர் பாஜக கட்சியின் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மேலும் கட்டிடங்களுக்கு வர்ணம் பூசும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் சாமுவேலிடம் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார் .இதில் சாமுவேல் இடம் வேலை செய்து வந்த ரவிக்குமார் வேறு நபர்களிடம் வேலைக்கு சென்று உள்ளதாக தெரிகிறது . அதை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே (சாமுவேல் – ரவிக்குமார் )அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு ரவிக்குமாரும் அவரது நண்பர்களும் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த சாமுவேலு ரவிக்குமாரிடம் வேலைக்கு வராதது குறித்து தகராறு செய்து ரவிக்குமாரை தாக்கியுள்ளார். இதை பார்த்த ரவிக்குமாரின் அண்ணன் மற்றும் 3 பேர் சேர்ந்து சாமுவேலை தாக்கி உள்ளார்கள் . இதில் பாஜக நிர்வாகி சாமுவேல், ரவிக்குமார், சதீஷ் உள்ளிட்ட மூன்று பேர் வெட்டு காயங்களுடன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் பெயிண்டிங் வேலை செய்து வந்த ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக நிர்வாகி சாமுவேலுவை அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார். பாஜக நிர்வாகி சாமுவேல் கொடுத்த புகாரின் பேரில் ரவிக்குமார் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ரவிகுமாருக்கும் பாஜக நிர்வாகி சாமுவேலுக்கும் வேலை சம்மந்தமான தகராறு மட்டுமின்றி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருட்டு வழக்கில் பாஜக நிர்வாகி சாமுவேல் , ரவிக்குமார் மற்றும் சிலரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு சம்பந்தமாக ரவிக்குமார் சாமுவேலுக்கு எதிராக செயல்படுவதாக அறிந்த பாஜக நிர்வாகி சாமுவேல் ரவிகுமாரிடம் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் ,இது சம்பந்தமாக அவர்களுக்குள் அடிதடி ஏற்பட்டு, இதில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு பாஜக நிர்வாகி சாமுவேல் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பது பாஜக வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Show comments
Published by
Aishwarya
Tags: BJP Murder case Salem ஆத்தூர் பாஜக ஐடி விங் நிர்வாகி