Homeசெய்திகள்சினிமா'சரிகம' நிறுவனம் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இளையராஜா பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

‘சரிகம’ நிறுவனம் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இளையராஜா பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

இசைஞானி இளையராஜாவுக்கு எதிராகச் பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான ‘சரிகம’ தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இளையராஜா பதிலளிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.'சரிகம' நிறுவனம் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இளையராஜா பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

இளையராஜா இசையமைத்த பல்வேறு திரைப்படப் பாடல்களின் உரிமைகளை அந்தந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து முறைப்படி தாங்கள் பெற்றுள்ளதாகச் சரிகம நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அந்தப் பாடல்களுக்குத் தனக்கே முழு உரிமை உள்ளது என இளையராஜா கூறி வருவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சரிகம நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பாடல்களை இளையராஜா பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி இளையராஜா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், தற்பொழுது அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்துள்ளது.

we-r-hiring

மீறப்பட்ட நீதிமன்றத் தடை
சரிகம நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய அவமதிப்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நீதிமன்றம் பிறப்பித்த தெளிவான இடைக்காலத் தடை உத்தரவை மீறி, சரிகம நிறுவனத்திற்கு உரிமையுள்ள பாடல்களை இளையராஜா தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். மேலும், அப்பாடல்களுக்குத் தொடர்ந்து சொந்தமும் கொண்டாடி வருகிறார்.

குறிப்பாக, ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற புகழ்பெற்ற பாடல் தொடர்பாக ‘பியாண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கு இளையராஜா சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியதுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். அவ்வாறு வழக்குத் தொடுத்தபோது, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்தோ அல்லது அமலில் உள்ள இடைக்காலத் தடை உத்தரவு குறித்தோ சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தெரிவிக்கவில்லை.

இதன் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றம் தொடக்கத்தில் ‘பியாண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கு எதிராக இடைக்காலத் தடை விதித்தது. பின்னர், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகே அந்தத் தடை உத்தரவு நீக்கப்பட்டது. இவ்வாறு நீதிமன்றத் தடை உத்தரவை திட்டமிட்டு மீறி வரும் இளையராஜா மீது கடுமையான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

சிறை தண்டனை மற்றும் சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கோரிக்கை
மேலும் அந்த மனுவில், “நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்திய மீறலுக்காக இளையராஜாவைச் சிறையில் அடைக்க வேண்டும். அவருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையைச் சரிகம நிறுவனத்திற்கு இழப்பீடாக ஒப்படைக்க வேண்டும்” என்றும் சரிகம நிறுவனம் மிகக் காரசாரமாகக் கோரியுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் தீவிரத்தை பரிசீலித்த நீதிபதி, சரிகம நிறுவனம் சுமத்தியுள்ள இந்த நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் குறித்து இசைஞானி இளையராஜா நேரில் அல்லது வழக்கறிஞர் மூலமாகப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளார். இசை உரிமைகள் தொடர்பான விவகாரத்தில், இளையராஜாவுக்கு எதிராகச் சிறை தண்டனை மற்றும் சொத்து பறிமுதல் கோரித் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு திரையுலகிலும் வழக்கறிஞர்கள் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – மண்டாடி படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

MUST READ