Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; 7 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; 7 பேர் பலி

-

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; 7 பேர் பலி

கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

Image
கிருஷ்ணகிரி பழையபேட்டை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பயங்கர சத்தத்துடன் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் உள்ள வீடுகளும் சேதமடைந்ததாக தெரிகிறது. 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

Image

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் பட்டாசு கிடங்கில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். தீவிபத்தில் 4 பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்டதை அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள், விபத்து நடத்த இடத்தில் குவிந்து மீட்புப்பணிக்கு உதவினர்.

MUST READ