Homeசெய்திகள்தமிழ்நாடு"பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

 

"பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று தமிழ்நாடு அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பிரம்மயுகம் படத்தில் ஹீரோவும் இல்லை, வில்லனும் இல்லை… மம்மூட்டி சுவாரஸ்ய தகவல்…

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, இன்று (பிப்.15) ஆளுநரின் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் விவாதத்தின் மீதான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆற்றினார்.

இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு பற்றி கேள்வி கேட்டேன்; ஆனால் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. வாக்குறுதிகளில் 10% மட்டுமே தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால் 95% நிறைவேற்றியதாக அரசு கூறுகிறது.

புஷ்பாவில் நடனமாடிய சமந்தா… புஷ்பா 2-ல் நடனமாடும் திஷா பதானி?…

காவிரியில் தமிழகத்திற்கான பங்கை கர்நாடகாவிடம் தமிழ்நாடு அரசு கேட்டுப் பெறாததால் குறுவைச் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். சட்டப்பேரவையில் எனது உரையை நேரலையில் ஒளிபரப்புவதில்லை. தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்களின் நிலை என்ன? தி.மு.க. ஆட்சியில் சென்னையில் எவ்வளவு தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது? மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்பதில் தி.மு.க. உறுப்பினர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை? தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் கொள்ளை அடிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

MUST READ