- Advertisement -
நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவிற்கு அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான திரு. எம். செல்வராஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ஆன்மா எல்லாம் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.