Homeசெய்திகள்தமிழ்நாடுமாவட்ட வாரியாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

மாவட்ட வாரியாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

-

- Advertisement -

மாவட்ட வாரியாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை  இன்று வெளியிட்டுள்ளார்

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் கடந்தாண்டை விட  இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாணவர்களை விட மாணவிகள் நான்கு சதவீதம் கூடுதல் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

கடந்த ஆண்டு 93.76% தேர்ச்சி விகிதம் பெற்ற நிலையில் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 94.03 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பாட திட்டத்தின் கீழ் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 8.51லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டும் ஈராண்டு சாதனைகள்- திருமாவளவன் வாழ்த்து

8,03,385 மாணவர்கள் தேர்வெழுதியதில் 7,55,451(94.03%) பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 4,05,753 பேரும்(96.38%), மாணவர்கள் 3,49,697 பேரும்(91.45%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.39% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 326 அரசு பள்ளிகள் உட்பட 2,767 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

கடந்தாண்டு பொதுத்தேர்வில் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதியதில் 7,55,998(93.76%) பேர் தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளிகள்- 89.80%, அரசு, உதவிபெறும் பள்ளி- 95.99%, தனியார், சுயநிதி பள்ளிகள்-99.08%, இருபாலர் பள்ளிகள்-94.39%, பெண்கள் பள்ளிகள்-96.04%, ஆண்கள் பள்ளிகள்-87.79% தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி விகிதத்தில் அறிவியல் பாடப் பிரிவுகள்-96.32%, வணிகவியல் பாடப்பிரிவுகள்- 91.63%, கலை பிரிவுகள்-81.89%, தொழிற்பாடப் பிரிவுகள்- 82.11% தேர்ச்சி விகிதம் பெறப்பட்டுள்ளது.

பாடங்கள் வாரியாக தேர்ச்சி விகிதத்தை பொருத்தவரை, கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.29% தேர்ச்சியும், தொடர்ந்து கணிதம்- 98.88%,  உயிரியல்- 98.47%, வேதியியல்- 98.31%, தாவரவியல்- 98.04%, விலங்கியல்- 97.77%, இயற்பியல்- 97.76%, வணிகவியல்- 96.41%, கணக்குப்பதிவியல்- 96.06% பாடங்கள் பெற்றுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. 2019ல் 91.3%, 2020ல் 92.3%, 2021ல் 100%, 2022ல் 93.76, 2023ல் 94.03% சராசரி தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2% அதிகரித்துள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் பெற்று முதலிடத்தையும், திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் 97.59 சதவீதம் பெற்று பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதேபோல் தமிழில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 15 பேர் 100க்கு 100 மதிப்பெண்களும், இயற்பியலில் 812 பேரும், வேதியியலில் 3,909 பேரும், உயிரியலில் 1,494 பேரும், கணிதத்தில் 690 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பேரும், கணினி அறிவியலில் 4,618 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இந்தாண்டு ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை- 32,501, கடந்தாண்டு செண்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை- 23,957

மாவட்ட வாரியாக ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்:

  1. விருதுநகர்- 97.85%

2.திருப்பூர்- 97.79%

  1. பெரம்பலூர்- 97.59%

கடைசி இடம்- ராணிப்பேட்டை- 87.30%

7 மாவட்டங்கள் 97% அதிகமாகவும், 16 மாவட்டங்கள் 95% மேலும் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.

மாவட்ட தேர்ச்சி விகிதம்- அரசுப்பள்ளிகள் வாரியாக

  1. திருப்பூர்- 96.45%
  2. பெரம்பலூர்- 95.90%
  3. விருதுநகர்- 95.43%

கடைசி இடம்- ராணிப்பேட்டை- 82.92%

20 மாவட்டங்கள் 90% மேல் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக தனியார் பள்ளிகள் 99.08 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 89.8 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

MUST READ