மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பெயரை அரசு மாற்ற முயன்றாலும், பயனடையும் ஒவ்வொரு பெண்களின் நெஞ்சத்திலும் கலைஞர் பெயர் நீங்காமல் நிறைந்திருக்கும் என்று மனோஜ் பாண்டியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பெயர் மாற்ற முயற்சிக்கு கண்டனம்:
தமிழகத்தில் திமுக அரசால் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

மனோஜ் பாண்டியன் பேச்சு:
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், “அரசியல் காரணங்களுக்காக அரசாங்க ஏடுகளில் இத்திட்டத்தின் பெயரை நீங்கள் வேண்டுமானால் மாற்றலாம்.
ஆனால், மாதம் 1,000 ரூபாய் பெற்றுத் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் கலைஞர் என்ற பெயர் ஆழமாகப் பதிந்துள்ளது. அதை யாராலும் மாற்ற முடியாது, எனத் தெரிவித்துள்ளார்.
எளிய மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இத்தகைய முன்னோடித் திட்டங்களின் பெயர்களை மாற்றுவதை விட, திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
