Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்த நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றமும் மாவட்ட எஸ்பி பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

we-r-hiring

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு நிகழவில்லை, அவர்கள் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர். குடிப்பழக்கமே இல்லாத ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்து இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழப்பு அதிகரித்துவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

MUST READ