Homeசெய்திகள்தமிழ்நாடு10 சவரன் தங்கக்காசு மாலையா? சமூக வலைத்தள விமர்சனத்துக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

10 சவரன் தங்கக்காசு மாலையா? சமூக வலைத்தள விமர்சனத்துக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

-

- Advertisement -

திருப்பதியில் சாமி தரிசனம் செய்தபோது, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கழுத்தில் அணிந்திருந்தது 10 சவரன் தங்கக்காசு மாலை என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தான் அணிந்திருந்தது சாதாரண ஃபேஷன் நகைதான் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.10 சவரன் தங்கக்காசு மாலையா? சமூக வலைத்தள விமர்சனத்துக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனம்

we-r-hiring

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தபோது அமைச்சர் கீர்த்தனா கழுத்தில் அணிந்திருந்த காசு மாலை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. அந்த மாலை 10 சவரன் தங்கத்தால் செய்யப்பட்டதாகக் கூறி சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கீர்த்தனா, தான் அணிந்திருந்த நகையின் புகைப்படத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.

“சாதாரண ஃபேஷன் நகைதான்”

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தான் அணிந்திருந்தது சாதாரண ஃபேஷன் நகை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் ஒரு சாதாரணப் பெண் என்பதால்தானோ என்னவோ, தனது ஒவ்வொரு சொல்லையும் செயலையும் மட்டுமல்லாமல், அணிந்திருக்கும் தங்கத்தின் தரத்தைக்கூடச் சோதிக்கச் சிலர் துடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“என் துணிச்சலைச் சோதிக்க முடியாது”

தனது பதிவில் மேலும் அவர் கூறியிருப்பதாவது: “ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். தங்கத்தை எத்தனை முறை சோதித்தாலும், அதன் மதிப்பு குறைவதில்லை. என் பின்னால் முதலமைச்சர் விஜய் அண்ணாவின் ஆதரவும், என் மீது அன்புகொண்ட மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது. என் தங்கத்தைச் சோதிக்கலாம்; என் துணிச்சலைச் சோதிக்க முடியாது” என்று விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் கீர்த்தனாவின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

பள்ளிக்கரணை இராம்சார் சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதிகளை அறிவியல்பூர்வமாகத் தீர்மானிக்க வேண்டும்! 65 நீர்நிலைகளையும் சேர்க்கக் கோரி சௌமியா அன்புமணி மனு

MUST READ