
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் சிலரின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், அமைச்சரவையில் இருந்து சிலர் நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.

“தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்கு பரிசளிக்கிறேன்”- கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
இந்த நிலையில், இன்று (மே 09) மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்லும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்திக்கவுள்ளார். அப்போது, தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் குறித்த பட்டியலை வழங்கவுள்ளதாக தகவல் கூறுகின்றன.
அதேபோல், நாளை மறுநாள் (மே 11) தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர் ஒருவர் பதவியேற்க உள்ளதாகவும், அதற்கான அழைப்பிதழை ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் வழங்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
“உயர்கல்விக்கு தேவையான உதவி செய்வதாக முதலமைச்சர் கூறினார்”- மாணவி நந்தினி பேட்டி!
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வகித்து வரும் நிதியமைச்சர் பொறுப்பு, தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.