Homeசெய்திகள்தமிழ்நாடுமான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் பெருக்கக் குழு- முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு!

மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் பெருக்கக் குழு- முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு!

-

- Advertisement -

தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான செயல்திட்டங்களை வகுக்க அமைக்கப்பட்ட ‘வருவாய் பெருக்கக் குழுவின்’ உறுப்பினர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் பெருக்கக் குழு- முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு!

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப வருவாயைச் சீரமைக்கவும், நிதி வள ஆதாரங்களை வலுப்படுத்தவும் வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, மூத்த பொருளாதார நிபுணரும் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட ‘வருவாய் பெருக்கக் குழுவை’ முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் அமைத்து உத்தரவிட்டிருந்தார்.

we-r-hiring

குழுவின் உயர்மட்ட உறுப்பினர்கள்
இக்குழு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதில் இடம்பெற்றுள்ள வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முதன்முறையாக முதலமைச்சரை நேரில் சந்தித்தனர்.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினர்கள்:
மான்டேக் சிங் அலுவாலியா – தலைவர் (முன்னாள் துணைத் தலைவர், மத்திய திட்டக்குழு)
கே.பி.கிருஷ்ணன் – பொருளாதாரத் துறைத் தலைவர், தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில்
அர்பிந்த் மோடி – பொருளாதார வல்லுநர், சர்வதேச நாணய நிதியம் (IMF)
நஜீப் ஷா – முன்னாள் தலைவர், மத்திய கலால் மற்றும் சுங்கவரி வாரியம்
எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் – கூடுதல் செயலர், தமிழக நிதித் துறை
எம்.சுரேஷ் பாபு – இயக்குநர், மெட்ராஸ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS)

பொருளாதாரச் சீரமைப்பு ஆலோசனை
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, தமிழக அரசின் வரி வருவாய் மற்றும் வரி அல்லாத பிற வருவாய்களை கணிசமாக உயர்த்துவதற்கான புதிய வழிமுறைகள், நிதியாதாரங்களைப் பெருக்குவதற்கான செயல்திட்டங்கள் மற்றும் தொலைநோக்கு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் குழுவினர் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த இக்குழு அளிக்கும் பரிந்துரைகள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடு வாழ் மாணவர்களுக்கு ₹131 கோடி உதவித்தொகை: சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அறிவிப்பு!

MUST READ