Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டவிரோத ரிசார்ட்டுகள் மீது அரசு நடவடிக்கை: சத்தியமங்கலத்தில் 42 ரிசார்ட்டுகளுக்கு சீல்!

சட்டவிரோத ரிசார்ட்டுகள் மீது அரசு நடவடிக்கை: சத்தியமங்கலத்தில் 42 ரிசார்ட்டுகளுக்கு சீல்!

-

- Advertisement -

​ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் மேலும் 42 உல்லாச விடுதிகளுக்கு (Resorts) சீல் வைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
​அரசு

வழக்கின் பின்னணி:
​சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமாகப் பல ரிசார்ட்டுகள் கட்டப்பட்டுச் செயல்படுவதாகவும், இதனால் அங்குள்ள வனவிலங்குகளின் வாழ்வாதாரமும், ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் கூறி ‘ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின்’ நிறுவனர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
​இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பெரும்பாலான சட்டவிரோத ரிசார்ட்டுகள் மீது இன்னும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டப்பட்டது.

we-r-hiring

​மாவட்ட ஆட்சியரின் அறிக்கை:
​இதற்குப் பதிலளித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
​சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஆசனூர், கேர்மங்கலம், தலமலை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரக் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விதிக மீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

​நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
​இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, “இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது முக்கியம். விதிகளை மீறி சட்டவிரோதமாகச் செயல்படும் ரிசார்ட்டுகள் எதுவாக இருந்தாலும், அவற்றுக்கு உடனடியாகச் சீல் வைக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தது.
​

மேலும், இந்த நடவடிக்கைகள் குறித்த அடுத்தகட்ட அறிக்கைக்காக, வழக்கின் விசாரணையை இன்னும் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் சத்தியமங்கலம் மலைப் பகுதியில் உள்ள ரிசார்ட் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ