Homeசெய்திகள்தமிழ்நாடுதென் மண்டல கவுன்சில் கூட்டம் கோவலத்தில் தொடக்கம்: அமித்ஷா தலைமையில் முக்கிய விவாதங்கள்!

தென் மண்டல கவுன்சில் கூட்டம் கோவலத்தில் தொடக்கம்: அமித்ஷா தலைமையில் முக்கிய விவாதங்கள்!

-

- Advertisement -

காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், 31-வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் கோவலத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

we-r-hiring

கூட்டத்தின் தொடக்கமாக முக்கிய பிரமுகர்களின் வரவேற்பும், அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலத் தலைவர்களின் அறிமுக உரைகளும் இடம்பெற்றன.

பங்கேற்கும் முக்கிய பிரதிநிதிகள்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான இக்கூட்டத்தில், ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தத் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தின் துணைத் தலைவராகத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

முக்கிய விவாதங்கள் மற்றும் கோரிக்கைகள்: முன்னதாக நடைபெற்ற கூட்டங்களில் நீட் எதிர்ப்பு, நிலுவையில் உள்ள பேரிடர் நிதியை உடனடியாக விடுவிப்பது மற்றும் கோவை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விரைவு ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவது போன்ற கோரிக்கைகள் தமிழ்நாட்டின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய கூட்டத்திலும் மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கல்வித்துறையில் குரல்வளையை நெரிக்கும் முயற்சிகள் பலிக்காது: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம்!

MUST READ