Homeசெய்திகள்தமிழ்நாடுஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை அண்ணா சாலையில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை அண்ணா சாலையில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

we-r-hiring

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோரின் புகைப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ஞானேஷ்குமார் உருவ பொம்மையையும் எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

2036 ஒலிம்பிக் இலக்கு: தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை – ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டம் தொடக்கம்!

MUST READ