Homeசெய்திகள்தமிழ்நாடுநீதிமன்ற உத்தரவை வரவேற்று திருமண வரவேற்பில் தீபம் ஏற்றிய ஜோடி!

நீதிமன்ற உத்தரவை வரவேற்று திருமண வரவேற்பில் தீபம் ஏற்றிய ஜோடி!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை வரவேற்கும் வகையில், சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமணத் தம்பதியினர் செயற்கைக் கல் தூண் அமைத்து அதில் தீபம் ஏற்றிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில், நீதிமன்ற உத்தரவை வரவேற்கும் விதமாகச் சென்னையில் புதுமணத் தம்பதியினர் நூதன முறையில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் பிரபாகரனுக்கும், சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த நிரீபாவுக்கும் சென்னை மதுரவாயலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை நினைவுபடுத்தும் வகையில் திருமண மேடையிலேயே செயற்கைக் கல் தூண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. வரவேற்பு நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, புதுமணத் தம்பதியினர் இருவரும் இணைந்து அந்தத் தூணில் தீபம் ஏற்றினர்.

ஆன்மிக உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், நீதிமன்ற உத்தரவை வரவேற்கும் விதமாகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அகல் விளக்குகளை நினைவுப் பரிசாக வழங்கி தம்பதியினர் மகிழ்வித்தனர்.

சமகால நிகழ்வையும் ஆன்மிக உணர்வையும் இணைத்து புதுமணத் தம்பதியினர் மேற்கொண்ட இந்த வித்தியாசமான முயற்சி, திருமண வரவேற்பில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வு தொடர்பான தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் மறு சீராய்வு மனு வரவேற்கத்தக்கது – பெ.சண்முகம்

 

 

MUST READ