Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர்!

-

- Advertisement -

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசை மாற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழா நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் விழாவைப் புறக்கணித்துள்ளார்.தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர்!

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கான நிரலில், வழக்கமாக முதலாவதாகப் பாடப்படும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் மூன்றாவது இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உயர்கல்வித் துறை அமைச்சர், மாநிலத்தின் பாரம்பரியத்திற்கும் தமிழின் பெருமைக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் இந்த மாற்றம் அமைந்துள்ளதாகக் கூறி விழாவுக்குச் செல்லாமல் புறக்கணிப்பதாக அறிவித்தார்.

we-r-hiring

துணைவேந்தரின் விளக்கம்,
இந்தச் சர்ச்சை குறித்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அளித்த விளக்கத்தில்,  “ஆளுநரின் அறிவுறுத்தலின்படியே விழா நிரல் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கே முதலிடம் வழங்கப்பட்டது” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வலுக்கும் சர்ச்சை
மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சரே பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த சம்பவம் தமிழக அரசியல் மற்றும் கல்விக் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இளைஞர்களின் எழுச்சிக்கு பணிந்ததா மத்திய அரசு? – விஜய் வெற்றி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிபுணர்களின் 5 முக்கிய கணக்கீடுகள்!

MUST READ