Homeசெய்திகள்தமிழ்நாடுதஞ்சாவூர்: செல்போன் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் மற்றும் ஆசிரியை கைது!

தஞ்சாவூர்: செல்போன் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் மற்றும் ஆசிரியை கைது!

-

- Advertisement -

தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி ஒருவருக்குச் செல்போன் வழியாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பள்ளி ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்திற்கு உதவியாக இருந்ததாக அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை திவ்யா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.தஞ்சாவூர்: செல்போன் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் மற்றும் ஆசிரியை கைது!செல்போன் மூலம் பாலியல் தொல்லை
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவர் தொடர்ந்து செல்போன் மூலமாகப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியை உடந்தை – பெற்றோர் புகார்
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அளித்துப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் மாணவிக்குத் தொல்லை கொடுக்க அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை திவ்யா என்பவர் உடந்தையாகவும் உதவியாகவும் செயல்பட்டது தெரியவந்தது.

we-r-hiring

இருவர் கைது மற்றும் சிறை அடைப்பு
இதனைத் தொடர்ந்து, மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த ஆசிரியை திவ்யா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பள்ளி ஆசிரியர்களே மாணவிக்குப் பாலியல் தொந்தரவு அளித்து கைது செய்யப்பட்ட இச்சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: ஆளும்கட்சியை ‘அக்கு வேறு ஆணி வேறாக’ வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

MUST READ