Homeசெய்திகள்தமிழ்நாடுநேந்திரன் வாழைப்பழத்தின் விலை கடும் வீழ்ச்சி

நேந்திரன் வாழைப்பழத்தின் விலை கடும் வீழ்ச்சி

-

நேந்திரன் வாழைப்பழத்தின் விலை கடும் வீழ்ச்சி. கால்நடைகளுக்கு எடுத்து சென்று போடும் நிலைக்கு ஆளானார்கள்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வாழைக்காய் ஏலம் மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

நேந்திரன் வாழைப்பழத்தின் விலை கடும் வீழ்ச்சி

அதனை உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வியாபாரிகளும் மொத்த விலைக்கு வாங்கி செல்வார்கள். அங்கு புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்றுவரும்.

ஆனால், நேற்று(12.04.2023) நடைபெற்ற ஏலத்தில் நேந்திரன், கதளி, பூவன், தேன் வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழைத்தார்கள் விவசாயிகளால் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

நேற்று நடந்த ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் ஒரு கிலோ 15 ரூபாய் முதல் 22 ரூபாய் வரையும், கதளி ஒரு கிலோ அதிகபட்சமாக 40 ரூபாய் வரையும் விற்பனையானது.

நேந்திரன் வாழைப்பழத்தின் விலை கடும் வீழ்ச்சி

மேலும் பூவன் 500 ரூபாய் வரையும், தேன் வாழை 600 ரூபாய்க்கும், ரஸ்தாளி 400 ரூபாய்க்கும், ரோபஸ்டா 400 ரூபாய் வரையும், செவ்வாழை 600 ரூபாய்க்கும் ஏலம் போனது.

குறிப்பாக நேந்திரன் வாழைப்பழத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ 35 வரை விற்பனையான நிலையில் தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதனிடையே நேந்திரன் வாழைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் அதனை கால்நடைகளுக்கு எடுத்து சென்று போடும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.

நேந்திரன் வாழைப்பழத்தின் விலை கடும் வீழ்ச்சி

இதுகுறித்து ஏல மையத்தின் நிர்வாகிகள் கூறுகையில் நெல்லை, திருச்சி, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கேரள வியாபாரிகள் நேரடியாக சென்று விவசாயிகளிடம் விலைபேசி எடுத்துச் செல்கின்றனர்.

இதனால் மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நேந்திரன் வாழைத்தார்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது கேரளா வியாபாரிகள் வருவதே இல்லை. இதனால் நேந்திரன் வாழைத்தாரின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறினர்.

MUST READ