வருவாயில் 24% வட்டி கட்டவே செலவாகிறது; தினசரி செலவுகளுக்கே கடன் வாங்கும் சூழல் என எச்சரிக்கை!
தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை அறிக்கை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கும், அதிகரித்து வரும் கடன் சுமைக்கும் இடையே உள்ள ஒரு சமநிலைப் புள்ளியாகப் பார்க்கப்படும் நிலையில், அரசின் நிதி நிர்வாகம் குறித்துப் பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான பிரபாகர் ‘நக்கீரன் டிவி’க்கு அளித்த பேட்டியில் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.


கடன் வாங்குவது தவிர்க்க முடியாத ஒன்றா?
தமிழக அரசின் நிதி நிலை மேலாண்மை குறித்துப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “இந்த பட்ஜெட்டின் மிக முக்கிய அம்சமே, தமிழக அரசு இனிவரும் காலங்களில் கடன் வாங்குவதை நிறுத்தவே முடியாது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பதுதான்” என்றார்.
தேர்தல் பிரச்சாரங்களின்போது ஆட்சிக்கு வந்தால் கடன் வாங்குவதைக் கணிசமாகக் குறைப்போம் அல்லது முற்றிலும் நிறுத்துவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் மூன்று மாதங்களிலேயே சுமார் 20,000 கோடி ரூபாய் அளவுக்குப் புதிய கடன்கள் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
24% வருவாய் வட்டி கட்டவே சரியாகிறது, மேலும் பேசிய அவர், “நடப்பு நிதியாண்டிற்குள் மேலும் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழகத்தால் கடன் வாங்குவதை நிறுத்த முடியாது என்ற சூழல் தெரிகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 24% தொகை, வாங்கிய கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்கே சரியாகிறது” என்று கவலை தெரிவித்தார்.
பொருளாதார ரீதியான ஆபத்து சிக்னல்:
அமெரிக்கா போன்ற நாடுகள் அதிக கடன் வைத்திருந்தாலும், உலகளாவிய ரிசர்வ் கரன்சியான ‘டாலர்’ அவர்களிடம் இருப்பதால் அவர்களால் பணத்தை அச்சிட்டுச் சமாளிக்க முடியும் என்றும், ஆனால் தமிழகத்திற்கோ இந்தியாவிற்கோ அத்தகைய வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“கடந்த காலங்களில் கடன் வாங்கித்தான் நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போதும் அதே கடன் வாங்கும் அமைப்பை மாற்ற முடியாத நிலைப்பாடே தொடர்கிறது. நமது தினசரி செலவுகளுக்கே கடந்த மூன்று மாதங்களாகக் கடன் வாங்கியிருப்பது பொருளாதார ரீதியாக ஒரு மிகப்பெரிய ஆபத்தான அறிகுறி (Danger Signal)” என்று கூறி பேராசிரியர் பிரபாகர் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து: சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
