Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து: சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து: சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

-

- Advertisement -

சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ், சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்டை சென்னை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து: சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

we-r-hiring

 

முன்னாள் அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சை ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி அவர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணையின் போது பொன்முடி ஆஜராகாததைத் தொடர்ந்து, அவரை வரும் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் நேற்று முன் தினம் அதிரடி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.

பிடிவாரண்ட் ரத்து:
நீதிமன்றத்தின் இந்த பிடிவாரண்ட் உத்தரவை எதிர்த்து, பொன்முடி தரப்பில் வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர். இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், பொன்முடிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படவிருந்த சூழல் தவிர்க்கப்பட்டு, அவ்வழக்கில் அவருக்குப் பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது.

பெயர் மாற்றுவதில் பிரச்னை இல்லை; மக்கள் விரும்பும் திட்டங்கள் தொடர்வதே முக்கியம் – சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

MUST READ