Homeசெய்திகள்தமிழ்நாடுஅக்கா - தம்பியின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் - அமைச்சர் உதயநிதி!

அக்கா – தம்பியின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் – அமைச்சர் உதயநிதி!

-

நார்வே நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அக்கா தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நார்வே நாட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனும், இந்தியாவின் பிரக்ஞானந்தாவும் போட்டியிட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கார்ல்சனின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்த பிரக்ஞானந்தா இறுதியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகள் முன்னிலை பெற்று புள்ளிப்பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியிலேயே ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் சாதனை படைத்துள்ளார்.

இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், நார்வே செஸ் தொடரில் கலக்கியுள்ள கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கிளாசிக்கல் செஸ்ஸில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியிலேயே ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் புதிய சாதனை படைத்துள்ளார். அக்கா – தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ