Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல்  அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல்  அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

-

- Advertisement -

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை தொடரும்.... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல்  அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 23.07.2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

24.07.2024 முதல் 28.07.2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

MUST READ