Homeசெய்திகள்உலகம்ஜென்சென் ஹுவாங் மீண்டும் என்விடியா தலைவர் ஆனார்!

ஜென்சென் ஹுவாங் மீண்டும் என்விடியா தலைவர் ஆனார்!

-

- Advertisement -

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் (NVIDIA) தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜென்சென் ஹுவாங், மீண்டும் அதே பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டு 11 நாட்களிலேயே அவர் மீண்டும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குத் திரும்பியிருப்பது தொழில்நுட்ப உலகில் கவனத்தைப் பெற்றுள்ளது.

சர்ச்சையைத் தொடர்ந்து பதவி விலகல்:

என்விடியா நிறுவனத்தின் தலைவராகவும் சிஇஓவாகவும் இருந்து வந்த ஜென்சென் ஹுவாங், தனிப்பட்ட உறவுகள் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் சீன உளவுத்துறை தொடர்பான சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 12-ஆம் தேதி பதவி விலகினார். இதையடுத்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.

மீண்டும் பொறுப்பேற்ற ஜென்சென் ஹுவாங்:

இந்த நிலையில், முந்தைய முடிவை மாற்றிய என்விடியா இயக்குநர் குழு, நவம்பர் 23-ஆம் தேதி ஜென்சென் ஹுவாங்கை மீண்டும் நிறுவனத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநர் குழு உறுப்பினராக நியமித்தது.

இயக்குநர் குழு ஒருமனதாக இந்த முடிவை எடுத்ததாக நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹுவாங்குடன் நடைபெற்ற தொடர் ஆலோசனைகள் மற்றும் சந்திப்புகளுக்குப் பிறகு, நிறுவனத்தை வழிநடத்தும் அவரது திறன் மற்றும் விளக்கங்கள் குறித்து திருப்தி ஏற்பட்டதாகவும் இயக்குநர் குழு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் ஆலோசனையும் இடம்பெற்றது:

ஹுவாங்கை மீண்டும் நியமிக்கும் முடிவை எடுக்கும் நடைமுறையில் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டதாக என்விடியா தெரிவித்துள்ளது. அவரது மறுநியமனம் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கிடையே, வெளிநாட்டு உளவுத்துறை முயற்சிக்கு ஹுவாங் இலக்காக இருந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பான விசாரணையை இயக்குநர் குழு தொடர்ந்து மேற்கொள்ள உள்ளது. அந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஹுவாங் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நிறுவனத்தை வழிநடத்தும் ஹுவாங்:

தனது மீள் நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜென்சென் ஹுவாங், என்விடியா நிறுவனத்தை வழிநடத்த மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பதைப் பெருமையாகக் கருதுவதாகக் கூறியுள்ளார்.

இதன் மூலம், நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கிய என்விடியாவின் தலைமை மாற்றம் வெறும் 11 நாட்களில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது.

ரகசிய உறவு, சீன உளவு சர்ச்சை எதிரொலி: என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் திடீர் ராஜினாமா!

MUST READ