Homeசெய்திகள்உலகம்கனடா லாட்டரியில் கேரள பெண்ணுக்கு ரூ.30 கோடி ஜாக்பாட்! ஒரே நாளில் கோடீஸ்வரி ஆன சினேகா...

கனடா லாட்டரியில் கேரள பெண்ணுக்கு ரூ.30 கோடி ஜாக்பாட்! ஒரே நாளில் கோடீஸ்வரி ஆன சினேகா ஜாய்!

-

- Advertisement -

கனடா நாட்டில் லாட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்த பெண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.30 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகை கிடைத்துள்ளது. எட்மண்டன் நகரில் வசித்து வரும் சினேகா ஜாய் என்ற பெண், ‘லோட்டோ 6/49’ (Lotto 6/49) லாட்டரியில் 5 மில்லியன் கனடிய டாலர்களை வென்று ஒரே நாளில் கோடீஸ்வரியாக மாறியுள்ளார்.

ஒரே நொடியில் கோடீஸ்வரி!

கடந்த அக்டோபர் 21-ந்தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் சினேகா ஜாய் பங்கேற்றிருந்தார். குலுக்கல் முடிந்த பிறகு, தனது செல்போனில் உள்ள ‘லோட்டோ ஸ்பாட்’ (Lotto Spot) செயலி மூலம் லாட்டரி சீட்டை வழக்கம்போல் சரிபார்த்துள்ளார்.

அப்போது கிளாசிக் ஜாக்பாட் பிரிவில் அறிவிக்கப்பட்டிருந்த 6 எண்களும் தனது லாட்டரி சீட்டில் சரியாகப் பொருந்தியிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதன் மூலம் அவருக்கு 5 மில்லியன் கனடிய டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.30 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

பரிசு கிடைத்தது குறித்து பேசிய சினேகா ஜாய், இந்த வெற்றியை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும், அந்த தருணத்தில் ஏற்பட்ட உணர்வுகளை அதிர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி என மூன்று வார்த்தைகளில் விவரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

முதலில் வீட்டு கடனை அடைக்க திட்டம்!

இவ்வளவு பெரிய பரிசுத்தொகை கிடைத்துள்ள நிலையில், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து சினேகா ஜாய் ஏற்கனவே திட்டமிட்டுள்ளார்.

முதலில் தனது வீட்டிற்காக வாங்கியுள்ள கடனை முழுமையாக அடைத்து, மிகப்பெரிய நிதிச்சுமையிலிருந்து விடுபடுவதே அவரது முதல் இலக்காக உள்ளது.

உலகம் முழுவதும் சுற்றுப்பயணம்!

வீட்டுக் கடனை அடைத்த பிறகு, உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார். மேலும், கிடைத்துள்ள பரிசுத்தொகையின் ஒரு பகுதியை தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவில் ரூ.30 கோடிக்கும் அதிகமான லாட்டரி பரிசை வென்றுள்ள செய்தி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

டிசம்பர் 11, 12-ல் கனடா செல்கிறார் பிரதமர் மோடி! – இந்தியா, கனடா உறவை வலுப்படுத்த முக்கியப் பயணம்

MUST READ