நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகளும் கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்த கொடூரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சியடைய வைத்தன.


சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற வீடு
இந்த இயற்கை பேரிடருக்கு மத்தியிலும், அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது. சேற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து சுற்றியிருந்த அனைத்துக் கட்டிடங்களையும் தரைமட்டமாக்கி அடித்துச் சென்றபோதிலும், பச்சை நிறம் பூசப்பட்ட ஒரு வீடு மட்டும் அசைக்க முடியாமல் உறுதியுடன் நிமிர்ந்து நின்றது.
வெள்ளத்தின் சீற்றத்தைத் தாங்கி நிற்கும் அந்தப் பச்சை நிற வீட்டின் காட்சி இணையத்தில் காட்டுத்தீ போல பரவியது. அந்த வீட்டிற்குள் ஒரு குடும்பமே சிக்கியிருப்பது தெரியவந்ததையடுத்து, உலகெங்கிலும் உள்ள சமூக வலைதளப் பயனாளர்கள் அவர்களின் பாதுகாப்பிற்காகப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.
இணையத்தில் வெடித்த விவாதம் & பாதுகாப்புடன் மீட்பு
இவ்வளவு பெரிய வெள்ளத்தின் சீற்றத்தையும் தாங்கி இந்த வீடு எவ்வாறு சேதமடையாமல் நின்றது? எனப் பலரும் வியப்பு தெரிவித்ததுடன், அக்கட்டிடத்தின் அசாத்தியமான உறுதித்தன்மை இணையத்தில் பெரிய விவாதப் பொருளாக மாறியது.
இதனிடையே, சமூக வலைதளப் பயனர் ஒருவர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், வீட்டிற்குள் சிக்கியிருந்த குடும்பத்தினர் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி பத்திரமாக மீட்கப்பட்ட செய்தி உறுதி செய்யப்பட்டது. இது லட்சக்கணக்கான நெட்டிசன்களுக்குப் பெரும் நிம்மதியையும் ஆறுதலையும் அளித்துள்ளது.
நெட்டிசன்களின் கருத்துகள்:
இச்சம்பவம் குறித்து இணையத்தில் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்:
“அந்த இக்கட்டான சூழலில் குடும்பத்தினரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? இருப்பினும் இந்தத் தாக்குதலையும் தாங்கி நின்ற அந்த வீடு, தரமான கட்டிட நிர்மாணத்தின் முக்கியத்துவத்திற்குச் சிறந்த சான்று.”
“அந்த வீட்டை பலமாக கட்டிய பொறியாளருக்குப் பாராட்டுகள்; கடவுளின் அருளால் குடும்பத்தினர் உயிர் தப்பியது மிகுந்த மகிழ்ச்சி.”
நேபாளத்துக்கு இந்தியா அளித்த உதவி: அதிபர் ராமச்சந்திர பவுடெல் நன்றி!
