spot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்பிரான்சை வீழ்த்தியது வரலாற்று நிகழ்வு - மெக்சிகோ மக்கள்

பிரான்சை வீழ்த்தியது வரலாற்று நிகழ்வு – மெக்சிகோ மக்கள்

-

- Advertisement -
பிரான்சை வீழ்த்தியது வரலாற்று நிகழ்வு – மெக்சிகோ மக்கள்
மெக்சிகோவில் பிரான்ஸ் ராணுவத்தை வீழ்த்தி 161 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகைகள் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்றனர்.

பிரான்சை வீழ்த்தியது வரலாற்று நிகழ்வு - மெக்சிகோ மக்கள்

1862 ஆம் ஆண்டு தங்கள் நாட்டுக்கு படை எடுத்து வந்த பிரான்ஸ் படையினரை மெக்சிகோ ராணுவம் வீழ்த்தியது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் மே மாதம் சின்கோ டி மயோ என்ற விழா மெக்சிகோ நகரத்தில் நடைபெறும்.

we-r-hiring

அந்த வகையில் நடப்பாண்டு நடைபெற்ற விழாவில் பிரான்ஸ் ராணுவத்திற்கு எதிரான போர் காட்சிகள் நாடகமாக நடத்தப்பட்டது.

பிரான்சை வீழ்த்தியது வரலாற்று நிகழ்வு - மெக்சிகோ மக்கள்

மெக்சிகோவில் பாரம்பரிய உடைகள் அணிந்த சிலரும், பிரான்ஸ் ராணுவ சீருடை அணிந்தவர்களும் போர் காட்சிகளை கண்முன் கொண்டு வரும் வகையில் தத்துரூபமாக நடித்தனர் ‌.

இதில் ராணுவ ஆயுதங்களின் மாதிரிகளும் நிஜத் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. தங்கள் நாட்டு மக்களின் ஒற்றுமையை உலகிற்கு காட்டும் வகையில் இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

பிரான்சை வீழ்த்தியது வரலாற்று நிகழ்வு - மெக்சிகோ மக்கள்

மெக்சிகோவுடன் ஒப்பிடும்போது பிரான்ஸ் ராணுவம் மிகவும் வளம் வாய்ந்தது. அதனை வீழ்த்தியதை மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாக மெக்சிகோ மக்கள் கருதுகின்றனர்.

MUST READ