Homeசெய்திகள்உலகம்ட்ரம்ப் அரசின் புதிய கட்டுப்பாடு: நீதித்துறைத் தடையால் இந்திய மாணவர்களுக்குக் கிடைத்த நிம்மதி!

ட்ரம்ப் அரசின் புதிய கட்டுப்பாடு: நீதித்துறைத் தடையால் இந்திய மாணவர்களுக்குக் கிடைத்த நிம்மதி!

-

- Advertisement -

ட்ரம்ப் அரசின் கட்டுப்பாடுகளுக்கு கடிவாளம் : இந்திய மாணவர்கள் நிம்மதி..

உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள், உயர் ஆராய்ச்சி வகுப்புகள் மற்றும் அதிக ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் காரணமாக, இந்திய மாணவர்களின் முக்கிய உயர்கல்வித் தேர்வாக அமெரிக்கா பல ஆண்டுகளாக விளங்கி வருகிறது. ஆனால், சமீபகாலமாக அங்கு நிலவிவரும் விசா கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரச் சூழல் மாணவர்களைச் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

​மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு

​2025–26 கல்வி ஆண்டில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 6.5% குறைந்து 3,39,435 ஆகச் சரிந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக இந்தச் சரிவு பதிவாகியுள்ளது. குறிப்பாக, புதிதாகச் சேர்ந்துள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 17.7% குறைந்து சுமார் 2,30,000 ஆகக் குறைந்துள்ளது.

​பெரும் முதலீடும் தொடரும் கவலையும்

​அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் ஆண்டுதோறும் சுமார் 14.30 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,29,000 கோடி) தொகையைச் செலவிடுகின்றனர். இவ்வளவு பெரிய பொருளாதார முதலீட்டைச் செய்தாலும் கூட,
​படிப்பை முடித்தவுடன் வேலை கிடைக்குமா? ​விசா காலம் நீட்டிக்கப்படுமா?
​அமெரிக்காவிலேயே தொடர்ந்து பணியாற்ற முடியுமா? ​என்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

​நீதித்துறையின் அதிரடித் தடை

​இத்தகைய இக்கட்டான சூழலில், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கான காலக்கெடுவைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்ப் அரசு கொண்டுவந்த புதிய விதிமுறைகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

​இதன் மூலம், மாணவர்கள் தங்களது அங்கீகரிக்கப்பட்ட கல்வித் திட்டத்தின் காலம் முழுமையும் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கும் பழைய நடைமுறையே தற்போது தொடர்கிறது.

​தொடரும் நிச்சயமற்ற தன்மை

​நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மாணவர்களுக்கு தற்காலிக நிம்மதியை அளித்திருந்தாலும், விசா நடைமுறைகளில் நிலவும் சிக்கல்களும் வேலைவாய்ப்பு குறித்த நிச்சயமற்ற தன்மையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.  இந்தச் சூழலில், இந்திய மாணவர்கள் தங்களது அமெரிக்கக் கல்வி கனவை நோக்கி தொடர்ந்து பயணிப்பார்களா? அல்லது ஐரோப்பா போன்ற மாற்று நாடுகளை நோக்கித் தங்கள் கவனத்தைத் திருப்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: இந்தியர் ஒருவர் மாயம் – இருவர் மருத்துவமனையில் அனுமதி!

MUST READ