Homeசெய்திகள்உலகம்ட்ரம்பின் 'திடீர்' ஹேர் ஸ்டைல் மாற்றம்: சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறிய அமெரிக்க அதிபரின்...

ட்ரம்பின் ‘திடீர்’ ஹேர் ஸ்டைல் மாற்றம்: சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறிய அமெரிக்க அதிபரின் தலைமுடி!

-

- Advertisement -

மஞ்சள் நிறத்திலிருந்து கருப்பு/பழுப்பு நிறத்திற்கு மாறிய அதிபர்; “நான் விக் வைப்பதில்லை” என்ற கூற்றுக்கு மத்தியில் இணையத்தில் வைரல்ட்ரம்பின் 'திடீர்' ஹேர் ஸ்டைல் மாற்றம்: சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறிய அமெரிக்க அதிபரின் தலைமுடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தனித்துவமான ஆடை மற்றும் தலைமுடி அலங்காரம் எப்போதும் சர்வதேச அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒன்றாகும். இந்நிலையில், அவரது தலைமுடி நிறத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் தற்போது சமூக ஊடகங்களிலும் சர்வதேச அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

we-r-hiring

மஞ்சள் நிறத்திலிருந்து பிரவுன் நிறத்திற்கு மாற்றம்
டொனால்ட் ட்ரம்ப் வழக்கமாகப் பராமரித்து வந்த தனது அடர் மஞ்சள் (Blonde) நிறத் தலைமுடியை மாற்றி, தற்போது திடீரென கருப்பு மற்றும் பழுப்பு கலந்த (Brunette) புதிய நிறத்திற்கு மாறியுள்ளார். அவரது இந்த புதிய தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் மற்றும் வலைப்பதிவர்கள் இது குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

“நான் விக் அணிவதில்லை” – ட்ரம்பின் முந்தைய உரை
முன்னதாகப் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய டொனால்ட் ட்ரம்ப், தனது தலைமுடி குறித்து எழும் வதந்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில், “எனது தலைமுடி செயற்கையானது அல்ல; நான் எந்தவிதமான ‘விக்’கையும் (WIG) அணிவதில்லை. இது முற்றிலும் என்னுடைய உண்மையான தலைமுடிதான்” என்று பகிரங்கமாகத் தெளிவுபடுத்தியிருந்தார். அவர் அவ்வாறு கூறிய சில நாட்களிலேயே, தனது வழக்கமான தலைமுடி நிறத்தை முற்றிலும் புதிய பழுப்பு நிறத்திற்கு மாற்றி புதிய தோற்றத்தில் காட்சியளிப்பது, இணையதளங்களில் சுவாரசியமான விவாதங்களையும் டிரெண்டிங்கையும் உருவாக்கியுள்ளது.

சவுதி அரேபியாவில் ஹவுதி படைகள் அதிரடி தாக்குதல்! 73 பேர் காயம் – எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

MUST READ