Homeசெய்திகள்உலகம்சவுதி அரேபியாவில் ஹவுதி படைகள் அதிரடி தாக்குதல்! 73 பேர் காயம் – எண்ணெய் விலை...

சவுதி அரேபியாவில் ஹவுதி படைகள் அதிரடி தாக்குதல்! 73 பேர் காயம் – எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

-

- Advertisement -

மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் தெற்கு பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 73 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

we-r-hiring

நான்கு முக்கிய நகரங்கள் குறிவைப்பு

ஹவுதிகளின் தாக்குதல்கள் அப்ஹா, கமிஸ் முஷைத், ஜிசான் மற்றும் நஜ்ரான் ஆகிய நகரங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளை குறிவைத்ததாக சவுதி கூட்டணி தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களை மிகவும் ஆபத்தான escalation என சவுதி தரப்பு வர்ணித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் கூட்டணி எச்சரித்துள்ளது.

எரிசக்தி நிலையங்களிலும் பாதிப்பு

தாக்குதல்களுக்குப் பிறகு சவுதியின் சில எரிசக்தி நிலையங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், சில இடங்களில் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவசரகால மற்றும் தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன. எரிசக்தி உள்கட்டமைப்புகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

சவுதி அரேபியா உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருப்பதால், அங்கு எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் உலக எண்ணெய் சந்தையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல்கள் தொடர்பான செய்திகளுக்குப் பிறகு Brent crude ஒரு பேரலுக்கு சுமார் $98 வரை உயர்ந்தது. அமெரிக்க WTI crude-வும் $93-ஐ கடந்தது. மத்திய கிழக்கு பதற்றம் நீடித்தால் எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் சந்தையில் உருவாகியுள்ளது.

மோதல் மேலும் தீவிரமாகுமா?

ஏற்கனவே யேமனில் சவுதி ஆதரவு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது சவுதி பகுதிகளில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

ஹவுதிகளின் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளதால், வரும் நாட்களில் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரிக்குமா என்ற கவலை எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

மத்திய கிழக்கில் மோதல் நீடித்து, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், எண்ணெய் இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள இந்தியாவுக்கும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு நீடித்தால் ரூபாய் மதிப்பு, பணவீக்கம் மற்றும் பெட்ரோல்–டீசல் விலை உள்ளிட்டவற்றிலும் அழுத்தம் ஏற்படக்கூடும். இதனால் சவுதி–யேமன் மோதல் தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தோனேசியாவில் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை சீற்றம்: 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! 1.7 லட்சம் பயணிகள் தவிப்பு!

MUST READ