Homeசெய்திகள்உலகம்அமெரிக்கா - ஈரான் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு: "ஈரான் சரணடைய வேண்டும்"...

அமெரிக்கா – ஈரான் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு: “ஈரான் சரணடைய வேண்டும்” – டிரம்ப் அதிரடி!

-

- Advertisement -

அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த பிப். 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

we-r-hiring

இந்த போர் நிறுத்தம் அடுத்த 60 நாட்கள் அமலில் இருக்கும். அதற்குள் இறுதி அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இருதரப்பு இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இந்த சூழலில் 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கூறும்போது, “ஈரான் தரப்பு வெள்ளை கொடியை காட்டி சரண் அடைய வேண்டும் என்ற எனது முடிவில் மாற்றம் கிடையாது” என்று தெரிவித்தார்.

ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறும்போது, “போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா அடிக்கடி மீறியது. இதனால் ஒப்பந்தம் கையெழுத்தானதில் எந்த பயனும் இல்லை” என்று தெரிவித்தார்.

பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைத்தபோது சிக்கிய தங்கப் புதையல்: ரூ.98 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள், நாணயங்கள் கண்டெடுப்பு!

MUST READ