- Advertisement -
தமிழோ, தெலுங்கோ, மலையாளமோ எந்த மொழியாக இருப்பினும் புது வரவுகளுக்கு பஞ்சமில்லை. புது திரைப்படங்கள் போல ஒவ்வொரு ஆண்டும் புது முகங்கள் திரையுலகிற்கு அறிமுகமாகின்றன. முது முகங்களுக்கு மத்தியில் தங்களின் அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள நடிகைகள் எடுக்க வேண்டிய முயற்சிகள் ஏராளம். 30 வயதை தாண்டினாலே ஓரம்கட்டி விடும் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடி கட்டி பறப்பவர்கள் வெகு சிலர்களே…அந்த வகையில் நடப்பு ஆண்டில் ரசிகர்களின் மனதை வென்று முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களை குறித்த ஒரு சிறிய தொகுப்பு இதோ….
த்ரிஷா எனும் திகட்டாத வசீகரம்…
21 ஆண்டுகளாக வெள்ளித்திரையை ஆளும் தென்னகத்து ராணி தான் இந்த த்ரிஷா கிருஷ்ணன். தி சவுத் குயின் என பிரியமுடன் அழைக்கப்படும் த்ரிஷா, சினிமாவிற்கு வந்து 21 ஆண்டுகள் ஆயினும், நாயகியாகவே நீடித்துக் கொண்டிருக்கும் சாதனையை படைத்தவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, திரைப்படங்களில் நடித்து 20-களில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்த த்ரிஷாவுக்கு கடந்த சில வருடங்களாக அமைந்த திரைப்படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவுக்கு கோலிவுட் திரையுலகில் மீண்டும் ஒரு சிவப்பு கம்பளத்தை விரித்துக்கொடுத்தது. அழகும் அறிவும் ஒருசேர நிரம்பிய பெண்ணாக கோலிவுட் ரசிகர்களின் குந்தவையாகவே மாறிப்போனார் த்ரிஷா. பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த த்ரிஷா, அடுத்தடுத்து தி ரோடு, லியோ, விடாமுயற்சி படங்களின் மூலம் கோலிவுட்டில் விட்ட கொடியை பிடித்தார்.
நயன் எனும் மூன்று எழுத்து மந்திரம்…
