spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநான் நேரடியா மோத மாட்டேன் ஆனா அவரு ..... 'ராயன்' படம் குறித்து எஸ் ஜே...

நான் நேரடியா மோத மாட்டேன் ஆனா அவரு ….. ‘ராயன்’ படம் குறித்து எஸ் ஜே சூர்யா!

-

- Advertisement -

நடிகர் தனுஷின் நடிப்பிலும் இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம் தான் ராயன். இந்த படம் தனுஷின் ஐம்பதாவது படமாகும்.நான் நேரடியா மோத மாட்டேன் ஆனா அவரு ..... 'ராயன்' படம் குறித்து எஸ் ஜே சூர்யா! சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ள நிலையில் இவர்களுக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், அபர்ணா பால முரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அதற்கான புரோமோஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் நடைபெற எஸ் ஜே சூர்யா ராயன் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “இந்த படத்துக்காக ஒரே ஒரு நாள் மட்டும் தான் டப்பிங் கொடுத்தேன். மத்ததெல்லாம் சைகைதான். நான் ராயபுரத்தின் ஓநாய் மாதிரி. நேரடியாக மோத மாட்டேன். ஆனால் தனுஷ் பதுங்கிப் பாய்வாரு” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ