அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். படத்தில் வில்லன்களாக அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி கிட்டத்தட்ட 70% படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இதன் இறுதி கட்டப் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஏற்கனவே வெளியான மூன்று போஸ்டர்களில் அஜித், வெள்ளை நிற ஹேர் ஸ்டைலில் இருந்தார். நேற்று (ஜூலை 19ஆம் தேதி) வெளியான போஸ்டரில் கருப்பு நிற ஹேர் ஸ்டைலில் இருந்தார் அஜித். இதன் மூலம் அஜித் இந்த படத்தில் இரண்டு விதமான லுக்கில் நடித்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் நடந்த பேட்டியில், ” அஜித் இந்த படத்தில் இரண்டு வித்தியாசமான லுக்கில் நடித்திருக்கிறார். கருப்பு நிற ஹேர் ஸ்டைல் பிளாஷ்பேக் போர்ஷன். மேலும் அஜர்பைஜானில் நடந்து வரும் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் பட குழு ஐதராபாத் செல்கின்றனர். அங்கு எட்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அதன் பின்பு ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடையும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -