நடிகர் சூரி கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பெயர் பெற்றார்.
அதை தொடர்ந்து கொட்டுக்காளி, விடுதலை 2 போன்ற படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சூரி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனமும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். அர்துர் ஏ வில்சன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஷிவதா, ரோஷினி, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
உங்களின் பேராதரவுடன் இன்று வெற்றிகரமான 50வது நாள் #Garudan 🦅
@SasikumarDir @Iamunnimukundan
Written and directed by @Dir_dsk
An @thisisysr musical#VetriMaaran @RevathySharma2 @SshivadaOffcl @Roshni_offl @thondankani @mimegopi @dushyanthjayap1 @ArthurWisonA @PradeepERagav… pic.twitter.com/rcvGKCnKnf— Actor Soori (@sooriofficial) July 19, 2024
கிராமத்துக் கதை களத்தில் வஞ்சம், துரோகம், பழிவாங்கல் ,காதல் என அனைத்தும் கலந்த படமாக இந்த படம் கடந்த மே மாதம் 31ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வெற்றிகரமான ஐம்பதாவது நாளை படக் குழுவினர் கொண்டாடியுள்ளனர். மேலும் ரசிகர்கள் தந்த பேராதரவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.


