Homeசெய்திகள்சினிமா'ரன் பேபி ரன்' மார்ச் 10ம் தேதி ஓடிடியில் வெளியீடு

‘ரன் பேபி ரன்’ மார்ச் 10ம் தேதி ஓடிடியில் வெளியீடு

-

- Advertisement -

இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஜஸ்வரியா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘ரன் பேபி ரன்’. இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ஆர்.ஜே.பாலாஜி பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவர் “LKG” படத்தின் மூலம் ஹிரோவாக மாறினார். தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேஷம் போன்று இவர் நடித்த படங்கள் பெரும் வெற்றிப் பெற்றது.

we-r-hiring

‘ரன் பேபி ரன்’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ரன் பேபி ரன்‘ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 10-ஆம் தேதி ”டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்” என்னும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இது குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. படக்குழு வெளிட்டுள்ள போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ