spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'மங்காத்தா 2' படம் குறித்து வெங்கட் பிரபு என்ன சொன்னார் தெரியுமா?

‘மங்காத்தா 2’ படம் குறித்து வெங்கட் பிரபு என்ன சொன்னார் தெரியுமா?

-

- Advertisement -

கடந்த 2011 ஆம் ஆண்டு அஜித், அர்ஜுன், திரிஷா ஆகியோரின் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் மங்காத்தா. 'மங்காத்தா 2' படம் குறித்து வெங்கட் பிரபு என்ன சொன்னார் தெரியுமா?இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அஜித்தின் 50வது படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்ததாக மங்காத்தா 2 திரைப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய் நடிப்பில் இயக்கியுள்ள தி கோட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மங்காத்தா 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது, “மங்காத்தா 2 திரைப்படம் குறித்து பேசியிருக்கிறோம். நிறைய பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது. தலையை வைத்து மட்டுமே நான் இரண்டாம் பாகத்தை இயக்க முடியும். இல்லையென்றால் ரசிகர்கள் என்னை அடித்து விடுவார்கள். சமீபத்தில் தான் நாங்கள் அஜர்பைஜானில் சந்தித்தோம். மேலும் மூன்று நாட்கள் இது குறித்து பேசினோம். தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகிய இருவருடனும் இணைந்து நான் பணியாற்ற விரும்புகிறேன். அதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

we-r-hiring

வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ