Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது

-

- Advertisement -

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேரை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராமன் காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது தற்கொலைக்கு முயன்று, சிகிசசை பலனின்றி உயிரிழந்தார்.

we-r-hiring

13 வயது பள்ளி சிறுமி பலாத்காரம்: முன்னாள் நாதக நிர்வாகி உட்பட 8 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு

இந்த வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவராமனுக்கு உதவியாக இருந்த காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதானவர்களின் எண்ணிகை 17 ஆக உயர்ந்துள்ளது.

MUST READ