Homeசெய்திகள்தமிழ்நாடுதவெகவின் 'வெற்றி வீடு' திட்டமும், வெற்று அறிவிப்புகளும்: அரசியல் விமர்சகர் எஸ்.பி. லட்சுமணன் கடும் தாக்கு!

தவெகவின் ‘வெற்றி வீடு’ திட்டமும், வெற்று அறிவிப்புகளும்: அரசியல் விமர்சகர் எஸ்.பி. லட்சுமணன் கடும் தாக்கு!

-

- Advertisement -

​​தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட முதல் பட்ஜெட் மற்றும் அதன் திட்ட அறிவிப்புகள் குறித்துப் பிரபல அரசியல் விமர்சகர் எஸ்.பி. லட்சுமணன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெகவின் அறிவிப்புகள் வெறும் ஏமாற்று வேலைகளே என்றும், நடைமுறைச் சாத்தியமற்றவை என்றும் அவர் சாடியுள்ளார்.

we-r-hiring

​’வெற்றி வீடு’ திட்டமும் நிதி ஒதுக்கீட்டு மோசடியும்:
​தவெக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘வெற்றி வீடு’ போன்ற திட்டங்களின் பெயரிடும் முறைகளையும், அதன் பின்னணியில் உள்ள நியாயங்களையும் அவர் கேள்விக்குள்ளாக்கினார். இத்தகைய பிரம்மாண்டமான திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்குள்ளது என்ற கேள்வியை எழுப்பிய அவர், பட்ஜெட்டில் இதற்கான முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கான உதவித்தொகை போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெறும் காகித அளவிலேயே நிற்கும் என்றும் அவர் விமர்சித்தார்

காவிரி விவகாரமும் திசைதிருப்பும் அரசியலும்:
​தமிழகத்தை முழுமையாகப் பாதிக்கக்கூடிய காவிரி நீர்ப் பிரச்சினை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், தேவையற்ற அரசியல் நாடகங்கள் மூலமாக மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்பும் முயற்சிகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், உண்மையான மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை விடுத்து, விளம்பரத்துக்காகவும் அரசியல் லாபத்துக்காகவுமே இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

​கட்சியை வளர்க்கிறோம் பேர்வழி என்று கூறிக்கொண்டு சாமானிய மக்களை ஏமாற்றும் தந்திர அரசியலைத் தவெக கைவிட வேண்டும் என்றும், கள எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியில் கடுமையாக எச்சரித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு (டிலிமிடேஷன்) மசோதா: எதிர்க்கட்சிகளின் அச்சமும், உண்மையான கணக்குகளும்! – ரங்கராஜ் பாண்டே 

 

MUST READ