Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசின் முதல் பட்ஜெட்: விவசாயிகளுக்கு ஏமாற்றம், மதுவிலக்கு பற்றிய மௌனம் - சௌமியா அன்புமணி...

தமிழக அரசின் முதல் பட்ஜெட்: விவசாயிகளுக்கு ஏமாற்றம், மதுவிலக்கு பற்றிய மௌனம் – சௌமியா அன்புமணி பேட்டி!

-

- Advertisement -

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய பட்ஜெட்டில் வேளாண் துறை மற்றும் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதும், கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகாததும் விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகி சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், பட்ஜெட்டில் உள்ள நிறைகள் மற்றும் குறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளாா்.தமிழக அரசின் முதல் பட்ஜெட்: விவசாயிகளுக்கு ஏமாற்றம், மதுவிலக்கு பற்றிய மௌனம் - சௌமியா அன்புமணி பேட்டி!

​வரவேற்கத்தக்க அம்சங்கள்
​பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில திட்டங்கள் பாராட்டுக்குரியவை எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த ‘சேவை உரிமை பெறும் சட்டம்’ அமல்படுத்தப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார். மேலும், ‘தாய்மாமன் சீர்’ (அண்ணன் சீர்) திட்டங்கள் மற்றும் முதியோருக்கான சிறப்புப் பாதுகாப்பு மையங்கள் போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

we-r-hiring

​விவசாயத்துறைக்கு ஏமாற்றம்
​வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சௌமியா அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.  குறிப்பாக, ​கடந்த ஆண்டைக் காட்டிலும் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ​தர்மபுரி காவிரி உபரிநீர் திட்டம், அரியலூர் சோழன் பாசனத் திட்டம் உள்ளிட்ட முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எவையும் இடம்பெறாதது விவசாயிகளுக்குப் பெரிய ஏமாற்றம் அளித்துள்ளது. ​விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த கூட்டுறவு நகை மற்றும் பயிர்க்கடன் முழு தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.தமிழக அரசின் முதல் பட்ஜெட்: விவசாயிகளுக்கு ஏமாற்றம், மதுவிலக்கு பற்றிய மௌனம் - சௌமியா அன்புமணி பேட்டி!

​கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்புச் சுருக்கம்
​பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.4,000 கோடி வரை குறைக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. மேலும், ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியில் இருக்கும் சூழலில், காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்தும், அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் குறித்தும் பட்ஜெட்டில் எந்தத் தெளிவும் இல்லை என்றார்.

​மதுவிலக்கு கொள்கை குறித்த மௌனம்
​சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பையும் குடும்பங்களின் நிம்மதியையும் உறுதி செய்ய மதுவிலக்கை அமல்படுத்துவது அவசியமானது. ஆனால், படிப்படியாக மதுக்கடைகளை மூடுவது குறித்தோ அல்லது போதைப்பொருட் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதற்கான மாற்று வருவாய் வழிகள் குறித்தோ இந்த பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை என அவர் வேதனை தெரிவித்தார். ​நாளை தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையிலாவது கூட்டுறவு கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளுக்கான சிறப்பான அறிவிப்புகள் வெளியாகும் என நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பழனி தண்டபாணி மட நிலப் பத்திரப்பதிவு முறைகேடு வழக்கு: சீல்டப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

MUST READ