Homeசெய்திகள்தமிழ்நாடுமின் கணக்கீட்டைத் தனியாரிடம் ஒப்படைப்பதா? சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையை உடனே கைவிடுக: அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

மின் கணக்கீட்டைத் தனியாரிடம் ஒப்படைப்பதா? சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையை உடனே கைவிடுக: அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

-

- Advertisement -

மின்சாரக் கட்டணக் கணக்கீடு செய்யும் பணியை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளாமல் தனியாரிடம் ஒப்படைக்க முயலும் அரசின் நடவடிக்கைக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மின் கணக்கீட்டைத் தனியாரிடம் ஒப்படைப்பதா? சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையை உடனே கைவிடுக: அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியார் முகமைகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள அரசு முயல்வது அதிர்ச்சியளிக்கிறது. நிரந்தரப் பணிகளை ஒழித்து, ஒப்பந்தப் பணி முறையை ஊக்குவிப்பது முற்றிலும் சமூகநீதிக்கு எதிரான செயலாகும்” என்று சாடியுள்ளார்.

we-r-hiring

பணியாளர்கள் பற்றாக்குறையே தாமதத்திற்குக் காரணம்
மேலும் அவர் கூறுகையில், “மின் கணக்கீடு செய்வதில் ஏற்படும் தாமதத்திற்குப் போதிய பணியாளர்கள் இல்லாததே முதன்மையான காரணம்.

காலிப் பணியிடங்களை நிரப்பாமல், தனியார்மயமாக்குவது அரசுப் பணிகளுக்கான இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் முயற்சியாகும்.

தனியாரிடம் ஒப்படைப்பதுதான் சமூகநீதியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, இந்த ஒப்பந்தப் பணி முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள இடங்களுக்கு உடனடியாக நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“பர்கர் சாப்பிட்டாலும், முடி வெட்டினாலும் பிரச்சினையா?”.. தொடர் விமர்சனங்களால் மனம்திறந்து ஆவேசப்பட்ட மேயர் பிரியா!

MUST READ