ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமாருக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.


இந்திய அணிக்காக களமிறங்கிய ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.
தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை
வீரர்களின் இந்த சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகிய இருவருக்கும் தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களின் சாதனை தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டுக்கு புதிய சாதனை: ரூ.50,000 கோடி முதலீடு!
