தமிழக முதலமைச்சர் விஜய் வரும் திங்கள்கிழமை அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சாமி தரிசனத்திற்காக மதுரைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்
மதுரை வருகையின் போது, மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெறும் சிறப்பு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், அரசின் புதிய நலத்திட்டமான ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குத் தங்க மோதிரங்களை வழங்கி விழாவில் அவர் உரையாற்றவுள்ளார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு
அரசு மருத்துவமனை நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்குச் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்குச் சிறப்புப் பூஜைகளில் கலந்து கொண்டு மீனாட்சி அம்மனைச் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கோவில் வளாகப் பகுதியில் சிறப்பு வழிபாட்டு ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
