Homeசெய்திகள்தமிழ்நாடு30% மெஷின்களில் மாபெரும் மோசடி!.. ஸ்டாலின் பெயரையே தூக்கிய கொடூரம் - நீதிமன்றத்தில் கேஸ் போடப்...

30% மெஷின்களில் மாபெரும் மோசடி!.. ஸ்டாலின் பெயரையே தூக்கிய கொடூரம் – நீதிமன்றத்தில் கேஸ் போடப் போவதாக திமுக பாய்ச்சல்!

-

- Advertisement -

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சுமார் 30 சதவீத இயந்திரங்கள் முறைக்கேடாகவும் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலேயே செயல்பட்டுள்ளதாகத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ள திமுக சட்டத்துறை செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ, இந்த விவகாரத்திற்கு எதிராக உடனடியாக நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்று அனல் பறக்கத் தெரிவித்துள்ளார்.30% மெஷின்களில் மாபெரும் மோசடி!.. ஸ்டாலின் பெயரையே தூக்கிய கொடூரம் - நீதிமன்றத்தில் கேஸ் போடப் போவதாக திமுக பாய்ச்சல்!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளைப் புட்டுப் புட்டு வைத்துள்ளாா்.

we-r-hiring

கொளத்தூர் இயந்திர ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கடந்த ஜூலை 29-ஆம் தேதி முதல் கொளத்தூர் தொகுதி இயந்திரங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையின்போது, இரண்டு விவிபேட் இயந்திரங்கள் செயல்படாமலிருந்ததும், வாக்குச்சாவடி எண் 157-இல் இருந்த முகவரி ‘டேக்’ (Tag) அவசரகதியில் மாற்றப்பட்டுப் புதியதாக இடப்பட்டிருந்ததும் அம்பலமானது. தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு மொத்தம் 14 இயந்திரங்கள் சோதிக்கப்பட்ட நிலையில், அதில் பல தொழில்நுட்பக் குழப்பங்கள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

ஸ்டாலின் பெயரைக் கண்டுகொள்ளாத ‘கண்ட்ரோல் யூனிட்’!
ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட உச்சகட்டக் குளறுபடி குறித்து ஆவேசமாகப் பேசிய என்.ஆர். இளங்கோ, வாக்குச்சாவடி எண் 208-இல் நோட்டா உட்பட மூன்று பேலட் யூனிட்கள் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். அதில், முதல் பேலட் யூனிட்டில் மு.க.ஸ்டாலின் பெயர் தெளிவாக அச்சிடப்பட்டிருந்த போதிலும், அதைக் ‘கண்ட்ரோல் யூனிட்’ (Control Unit) அடையாளம் காணவே இல்லை என்ற பேரதிர்ச்சித் தகவலைப் போட்டுடைத்தார்.

30% மெஷின்களில் மாபெரும் மோசடி!.. ஸ்டாலின் பெயரையே தூக்கிய கொடூரம் - நீதிமன்றத்தில் கேஸ் போடப் போவதாக திமுக பாய்ச்சல்!

இது ‘மனிதத் தவறு’ அல்ல; மெஷின்களே செய்யும் அப்பட்டமான மோசடி!
இதுவரை இதுபோன்ற குளறுபடிகளை ‘மனிதத் தவறு’ (Human Error) என்று சப்பக்கட்டு கட்டியவர்களுக்குச் சாட்டையடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், இந்த முறை நேரடியாக இயந்திரங்களிலேயே திட்டமிட்ட கோளாறுகள் (Machine Error) புகுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். ஆய்வு செய்யப்பட்ட மொத்த இயந்திரங்களில் சுமார் 30% இயந்திரங்கள் முற்றிலும் சந்தேகத்திற்குரிய விதத்திலே இயங்கியுள்ளதால், இதற்கு நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.

உத்தரமேரூர் மற்றும் ராஜபாளையத்திலும் தொடரும் சதி!
கொளத்தூர் தொகுதியோடு இந்த நாடகம் முடிந்துவிடவில்லை என்று எச்சரித்த அவர், உத்தரமேரூர் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளிலும் இதே போன்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் குளறுபடிகள் அரங்கேறியுள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். தேர்தல் ஜனநாயகத்தின் வேரையே அறுக்கும் வகையில் இயந்திரங்களில் நடந்துள்ள இந்த மோசடிகள் தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளன.

கொளத்தூர் தொகுதி EVM இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்: சிந்தாதரிப்பேட்டை கிடங்கில் 3-வது நாளாக நடைபெறும் ஆய்வு!

MUST READ