Homeசெய்திகள்தமிழ்நாடுதாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்; இது இரட்டை இலைக்கான போட்டி அல்ல, கட்சியின் உயிர் காக்கும் போராட்டம்...

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்; இது இரட்டை இலைக்கான போட்டி அல்ல, கட்சியின் உயிர் காக்கும் போராட்டம் – கோட்டீஸ்வரன் விளக்கம்!

-

- Advertisement -

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபு அவர்களின் உடல்நிலை பாதிப்பு, மருத்துவமனை சிகிச்சை மற்றும் தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் தொடர்பான அரசியல் நிலவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளாா். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்; இது இரட்டை இலைக்கான போட்டி அல்ல, கட்சியின் உயிர் காக்கும் போராட்டம் - கோட்டீஸ்வரன் விளக்கம்!

எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த நிலவரம்
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று (Respiratory problem / lung infection) காரணமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், தற்போது மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மருத்துவமனையில் அவருக்குத் தேவையான அனைத்து உயர்தரச் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் சிகிச்சைக் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆதவ் அஜுனன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

இடைத்தேர்தல் களமும் தவெக எதிர்கொள்ளும் சவால்களும்
இதனிடையே, நடைபெறவுள்ள இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன், தற்போதைய அரசியல் சூழலில் ஆளுங்கட்சியான தவெக தரப்பு கடுமையான சவால்களைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். “உண்மையில் தவெக தரப்பு தற்போது பெரும் கவலையில் உள்ளது. இடைத்தேர்தல் நிலவரங்கள் அவர்கள் எதிர்பார்த்தபடி வராததால், உளவுத்துறை அதிகாரிகளும், தேர்தல் வியூக வகுப்பாளர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்” என்றார்.

அதிமுகவின் கட்சி மீட்புப் போராட்டம்
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுமே விவசாயப் பகுதிகள் என்பதைக் சுட்டிக்காட்டிய அவர், இது வெறும் இடைத்தேர்தல் வெற்றி மட்டுமல்ல, அதிமுகவைச் பொறுத்தவரை இதுவொரு ‘கட்சி மீட்புப் போராட்டம்’ என்றார். மேலும், தேர்தல் களத்தில் நிலவும் பேரங்கள் மற்றும் அரசியல் வியூகங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் அவர் இப்பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம்! முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் – 800 பேருக்கு வேலைவாய்ப்பு

MUST READ