Homeசெய்திகள்தமிழ்நாடுதாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் சர்வேசனுக்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் ஆறுதல்!

தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் சர்வேசனுக்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் ஆறுதல்!

-

- Advertisement -

சென்னை ஆவடியில் அரசு மாநகரப் பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட நடத்துநர் சர்வேசனை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் சர்வேசனுக்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் ஆறுதல்!

மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

we-r-hiring

சென்னை கன்னியம்மன் நகரிலிருந்து ஆவடி நோக்கிச் சென்ற 61K தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்தில் ஏறிய ஐ.டி.ஐ. மாணவர்கள், பேருந்தின் பின்பக்கக் கதவை மூட விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தட்டிக்கேட்டு, மாணவர்களை முறையாகப் பயணிக்குமாறு அறிவுறுத்திய நடத்துநர் சர்வேசனை மாணவர்கள் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான நடத்துநர் சர்வேசனை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் அழைத்துச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ஆவடியில் அரசு பேருந்து நடத்துநர் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல் – பேருந்துகளை சாலையில் நிறுத்திய ஓட்டுநர்கள்!

MUST READ