Homeசெய்திகள்தமிழ்நாடுவிவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து இந்த அரசு வாய்த் திறக்காதது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின்...

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து இந்த அரசு வாய்த் திறக்காதது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

-

- Advertisement -

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து இந்த அரசு வாய்த் திறக்காதது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு சொற்ப தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்ததாக விமர்சித்துள்ளார்.

we-r-hiring

மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, இடைத்தேர்தல் முடிந்த பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அமைச்சர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் நெருங்கியும் இதுவரை விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் அறிவிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரசு மௌனம் காப்பது ஏன் என்றும், பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்க துணைத் தலைவராக கவிதா ஜவஹர் நியமனம்! முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

MUST READ