Homeசெய்திகள்தமிழ்நாடுகவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோரை விடுவித்தது செல்லும் – தமிழக அரசின் மேல்முறையீடு...

கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோரை விடுவித்தது செல்லும் – தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி!

-

- Advertisement -

கவின் ஆணவக் கொலை வழக்கில் இருந்து சுர்ஜித்தின் பெற்றோரை விடுவித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோரை விடுவித்தது செல்லும் – தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி!

மேலும், இந்த வழக்கு விசாரணை கையாளப்பட்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், “ஒரு குற்றவியல் வழக்கை எவ்வாறு கையாளக் கூடாதோ, அவ்வாறு கவின் வழக்கு கையாளப்பட்டுள்ளது” எனக் கருத்து தெரிவித்துள்ளது.

we-r-hiring

கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி, சுர்ஜித்தின் பெற்றோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு தொடர்கிறது.

மக்களை அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு அழைப்பதை சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது” – சீமான் விமர்சனம்!

MUST READ