Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ ரயில் போன்று அனைத்து ரயில்களிலும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகள் அமைக்க வேண்டும் – மத்திய...

மெட்ரோ ரயில் போன்று அனைத்து ரயில்களிலும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகள் அமைக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு தயாநிதி மாறன் கடிதம்

-

- Advertisement -

மெட்ரோ ரயில்களில் இருப்பதைப் போன்று நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் அடுத்த ரயில் நிலையம் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.மெட்ரோ ரயில் போன்று அனைத்து ரயில்களிலும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகள் அமைக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு தயாநிதி மாறன் கடிதம்

இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

we-r-hiring

ரயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில், ஒவ்வொரு ரயிலிலும் டிஜிட்டல் அறிவிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் எனத் தனது கடிதத்தில் தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிகழ்நேர ரயில் தகவல்கள் வழங்க வேண்டும்!

ரயில் புறப்படும் இடம், அடுத்தடுத்து வரவுள்ள ரயில் நிலையங்கள், ரயில் வந்து சேரும் நேரம் மற்றும் ஏற்படும் காலதாமதம் உள்ளிட்ட விவரங்களைப் பயணிகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்நேர டிஜிட்டல் அறிவிப்புகளை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்ற அறிவிப்பு வசதி அனைத்து ரயில்களிலும் இருந்தால், பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிடுவதற்கும், அடுத்த ரயில் நிலையம் குறித்த தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ரயில்வே நிர்வாகம் இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகள் மற்றும் நிகழ்நேர தகவல் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விமானக் கட்டணம் பல மடங்கு கிடுகிடு உயர்வு!

MUST READ